Skip to main content

Maamannan



 
 
மாமன்னன் என்னும் படத்தை மாரி செல்வராஜ் என்பவரால் இயக்கமித்து 28 ஜூன் 2023ல்  வெளியிடப்பட்டது.இந்த படத்தின் கதாநாயகனாக  உதயநிதி ஸ்டாலின்(அதிவீரன் ) என்பவரும், கதாநாயகியாக ( கீர்த்தி சுரேஷ்) என்பவரும், கதாநாயகனின் தந்தையாக வடிவேல் (மாமன்னன் )என்பவரும்  நடித்துள்ளார்.பகத் பாசில்(ரத்தனவேல்) என்பவரும்  இத்திரைபடத்தில் வில்லனாக நடித்துள்ளார்.இப்படத்தின் கதை முழுவதும் மக்கள் அனைவரும்  யாருக்கு யாரும் தாழ்ந்தவர்கள்  அல்ல அனைவரும் சமம் என்றும் மக்கள் அனைவரும் எந்த விதஏற்றதாழ்வும் இல்லாமல்  ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை கூறியுள்ளார்.       



இந்த படத்தில் அதிவீரன் சிறு வயதில் இருக்கும் போது நண்பர்களுடன் கிணற்றில் குளித்து விளையாடும் போது உயர்சாதி மக்கள் அவர்களை கல்லால் அடித்து  ஒரு பையனைக் கொலைசெய்தனர். அதை பார்த்த அதிவீரன் பயந்து அந்த ஊரை விட்டு வெளியே சென்றார். சிறிது நாட்கள் கழித்து மாமன்னன் சேலம் மாவட்டம் காசிபுரம் என்னும் தனித்தொகுதி எம்.எல் ஏ வாக இருந்தார்.மாமன்னனின் மகன் அதிவீரன் தற்காப்புக் கலை 
பயிற்சி பள்ளி நடத்துகிறார்.மாமன்னன் கட்சியில் மாவட்ட செயலாளராக ரத்தன வேலும் இருந்தார்.



  அதிவீரனின் கல்லூரி தோழியாக லீலா  நண்பர்களுடன் இனணந்து அதிவீரன் இடத்தில்  இலவசக் கல்வி வகுப்புகளை நடத்துகிறார். கோச்சிங் சென்டர் நடத்தும் ரத்தினவேலுவின் அண்ணன் லீலாவின்'முயற்ச்சிகளுக்கு முட்டுக்கட்டை போட,இரு தரப்புக்குமான மோதல் ,வன்முறை வடிவம் எடுக்கிறது.

மாமன்னனையும் அதிவீரனையும் சமாதானம் பேச அழைக்கிறார் ரத்தினவேல்.அங்கே நடந்த பிரச்சனையால் இருவருக்கும் இடையில் இருந்த மோதல் உட்கட்சி பிரச்சனையாக மாறுகிறது.இதனால் ஆளும் கட்சியில் இருந்து விலகி எதிர்க்கட்சியில் சேர்ந்தார் ரத்தினவேல்.தேர்தலில் மாமன்னனை வீழ்த்த முடிவெடுக்கிறார் ரத்தினவேல். அதை மீறி வென்றாரா இல்லையா ?....படத்தின் இறுதியில் ட்விஸ்ட் இருக்கு போய் படத்த பாருங்க ....

Comments