இந்த படம் 2022ம் ஆண்டில் ஒரு அமெரிக்கா மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படமாக "தி பாழே ப்ளூ ஐ "வந்தது .இந்த படத்தை ஸ்காட் குருபர் இயக்கியுள்ளார்,இந்த படம் 2003ம் ஆண்டில் வெளிவந்த லூயிஸ் பேயர்டின் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது . இந்த படத்தின் ஆரம்பத்தில் எங்குபார்த்தாலும் பனிமூட்டங்களுடன் காணபடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக பனிமூட்டம் விலக ஒரு மரத்தில் பிணம் ஒன்று தொங்கிக்கொண்டு இருக்கும்படி திக் திக் நிமிடங்களுடன் ஆரம்பம் ஆகிறது. இது 1830ஆம் ஆண்டில் ஹட்ஸன் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்ட அமெரிக்க ராணுவ அகடெமியில் , ராணுவ கேண்டிடேட்டுகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதையும் கொல்லப்பட்ட உடலில் இதயம் திருடப்பட்டதையும் கண்டுப் பிடிக்கவரும் துப்பறிவாளராக கதாநாயகனின் அறிமுகம் ஆரம்பம் ஆகிறது பனிக்கு நடுவில் ஒரு ஆற்றுப்படுகையில் கைகளை கழுவிக்கொண்டு இருக்கிறார். பின் ஒரு ராணுவ அதிகாரி வந்து உங்களை எங்கள் மேல் அதிகாரி அழைத்து வர சொன்னார் என...